;
Athirady Tamil News

நான் தலையிடா விட்டால்… ரஷிய-உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக மெலனியா டிரம்ப் பரபரப்பு அறிக்கை

0

வாஷிங்டன்

ரஷிய-உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு நானே காரணம் என டிரம்ப்பின் மனைவி பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடுத்து வரும் போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின.

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.

டிரம்ப் நடவடிக்கை

போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த சூழலில், வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டு உள்ள அறிவிப்பு ஒன்றில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே ஒலெஷ்கி நகரில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் ஏற்படுத்தி உள்ளார். இதனால், அந்நகர் மீது அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் தற்காலிக அடிப்படையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

ராணுவ தாக்குதல்

அந்த நகரில் மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒலெஷ்கி பேரிடரின் மைய பகுதியாக உள்ளது. நகரில் வயது முதிர்ந்தோர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி, உணவு மற்றும் தூய்மையான குடிநீர் தேவையாக உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

குறைந்த அளவிலான மின்சாரம், தொடர் ராணுவ தாக்குதல் போன்றவற்றால் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். என்னுடைய தலையீடு இல்லாமல், நகரில் மனிதாபிமான உதவியை கொண்டு வந்திருப்பது சாத்தியமில்லை. முதியோர்களை வெளியேற்றுவதும் சாத்தியமில்லாத ஒன்றாக இருந்திருக்கும் என மெலனியா கூறியுள்ளார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.