;
Athirady Tamil News

கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் படுகாயம்!!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியோரமாக இருந்த வேலியுடன் மோதி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.