;
Athirady Tamil News

டத்தோ எஸ்.சாமிவேலு காலமானார்..!!

0

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு (86), கோலாலம்பூரில் நேற்று காலமானார். டத்தோ எஸ்.சாமிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், மறக்க முடியாத அத்தியாயமாக இருந்து வரும் டத்தோ எஸ்.சாமிவேலுவின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் டத்தோ சாமிவேலு. கடந்த 1979ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துவந்தார். 1963ல் இருந்து மலேசிய வானொலி மற்றும் மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி அறிவிப்பாளராக பணியாற்றினார். மேலும், மலேசிய தகவல் இலாகாவில் நாடக கலைஞராகவும் பணியாற்றிய அவர், ஒரு தமிழ்மொழி ஆர்வலராக விளங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.