;
Athirady Tamil News

உலக பொருளாதாரம்: மூன்றில் ஒரு பங்கு உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

0

உலகப் பொருளாதார வலிமையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
அந்த அமைப்பின் தலைவரான கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, கடந்த ஆண்டை விட 2023ஆம் ஆண்டு சற்று கடினமாக இருக்கும் எனவும், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் போர், விலைவாசி உயர்வு, அதிக வட்டி விகிதம், சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் ஆகியவற்றின் காரணமாக உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படக் கூடும்.

சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பேசிய கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, பொருளாதார மந்தநிலை இல்லாத நாடுகளில் கூட, லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

சிட்னியில் உள்ள மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் பொருளாதார வல்லுநரான கேட்ரீனா எல், உலகப் பொருளாதாரம் குறித்த தனது மதிப்பீடுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். அதில், உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு பெரிய பாதிப்புகளை தவிர்க்கும் எனவும், ஓரிரு இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மந்தநிலையை தவிர்க்க முடியாது என்றும், அமெரிக்கா மந்தநிலையை அடைவதற்கான விளிம்பில் இருப்பதாக
வும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியம், கடந்த அக்டோபர் மாதத்தில், 2023ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி குறியீடுகளை வெளியிட்டது. அதில் யுக்ரேன் போர் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியமை ஆகியவற்றால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடுகளை அந்த அமைப்பு குறைத்துள்ளது.
சீனா தனது பொருளாதாரத்தை சீர்செய்ய, ஜீரோ கோவிட் கொள்கையை துறந்ததால் அண்மை காலங்களில் அங்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருக்கும் சீனாவின் இந்த முடிவினால் 2023ஆம் ஆண்டில் பல்வேறு சிரமம் ஏற்படும், என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்து இருந்தார்.

அடுத்து வரும் ஒரு சில மாதங்கள் சீனாவுக்கு கடினமாக இருக்கும் என்றும், அது சீனாவின் வளர்ச்சிக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ஜியார்ஜீவா எச்சரித்து இருந்தார். சீனாவின் இந்த முடிவு உலக பொருளாதார வளர்ச்சி குறியீட்டிலும் எதிரொலிக்கும் என அவர் கூறி இருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் இந்த கூற்று உலக நாடுகளுக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டே பொருளாதார மந்தநிலையினால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு இது புதிய தகவல் அல்ல. யுக்ரேன் போர் காரணமாகவும், வட்டி விகிதத்தின் உயர்வு காரணமாகவும் ஆசிய நாடுகளில் வணிகமும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

சீனாவின் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், அங்கு
தொழிற்சாலை நடவடிக்கைகள் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக டிசம்பர் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) காட்டுகிறது.
பட மூலாதாரம், GETTY IMAGES
மிகப்பெரிய சுயாதீன சொத்து ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான சீனா இன்ஃடெக்ஸ் அகாடமி கணக்கெடுப்பின்படி, டிசம்பர் மாதத்தில் 100 நகரங்களில் உள்ள வீடுகளின் விலை தொடர்ந்து ஆறாவது மாதமாக சரிந்து வருகிறது.

ஜீரோ கோவிட் கொள்கை மாற்றத்தற்கு பிறகு முதல் முறையாக சனிக்கிழமையன்று பேசிய சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், சீனா ஒரு புதிய கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால், பொதுமக்களிடம் அதிக முயற்சியும், ஒற்றுமையும் இருக்க வேண்டும் என்றார்.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மந்தநிலை என்பது சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தேவை குறைந்துள்ளதை குறிக்கிறது.
சந்தையின் தன்மை எப்படி இருக்கிறது?
பட மூலாதாரம், GETTY IMAGES

அதிக வட்டி விகிதங்கள் கடன் வாங்குவதை அதிக சுமை மிக்கதாக மாற்றியுள்ளன. எனவே இந்த இரண்டு காரணங்களுக்காக நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதில் முதலீடு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்யலாம். இதனால் ஏற்படும் குறைந்த வளர்ச்சியினால் முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப எடுக்க தொடங்குவார்கள்.
எனவே ஏழை நாடுகளில், உணவு மற்றும் எரிபொருள் போன்ற முக்கியமான இறக்குமதிகளுக்கு செலுத்த குறைந்த பணமே இருக்கும் நிலை உருவாகும். இது போன்ற நிலையில், ஒரு நாணயத்தின் மதிப்பு வளமான பொருளாதாரம் மிக்க நாடுகளில் மதிப்புடன் ஒப்பிடும் போது அதிக மதிப்பை இழக்கிறது, இது சிக்கலை இன்னும் அதிகரிக்கிறது.

கடன்கள் மீதான அதிக வட்டி விகிதங்களின் தாக்கம் வளரும் நாடுகளையும் பாதிக்கிறது. இந்த நாடுகளுக்கு கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். பல தசாப்தங்களாக ஆசிய-பசிபிக் பிராந்திய பகுதிகளில் உள்ள நாடுகள் சீனாவை ஒரு முக்கிய வர்த்தக பங்களிப்பாளராகவும், நெருக்கடி காலங்களில் பொருளாதார உதவிக்காகவும் சார்ந்துள்ளன. சீனா கொரோனா தொற்றை கையாளும் விதத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இந்த நாடுகளிலும் எதிரொலிக்கும்.

சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை முடிவுக்கு வந்திருப்பதால் டெஸ்லா மின்சார கார்கள் மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் தயாரிப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு வரக்கூடும். கச்சா எண்ணெய் மற்றும் இரும்புத்தாது போன்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருவதால் இந்த பொருட்களில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஷார்ட் கேப்பிட்டல் நிறுவனத்தை சேர்ந்த பில் பிளேன், சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை மிக முக்கியமான ஒன்று என குறிப்பிடுகிறார். “உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் சந்தைகள் மிகவும் வலுவாக இருந்தாலும், உருவாக்கப்படும் வேலைகள் அதிக ஊதியம் கொண்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, நாம் ஒரு மந்தநிலையைக் காணப் போகிறோம், இதனால் சந்தைகள் நினைப்பது போல வட்டி விகிதங்கள் விரைவாக வீழ்ச்சியடையப் போவதில்லை” என்று பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் அவர் கூறினார்.

“இதன் காரணமாக ஏற்பட இருக்கும் விளைவுகளினால், 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் வரை சந்தைகள் மந்தநிலையில் இருக்கும்,” என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.