;
Athirady Tamil News

2019ல் இருந்து பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.22.76 கோடி செலவு- மத்திய அரசு தகவல்!!

0

தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 2019ம் ஆண்டில் இருந்து இதுவரை ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வகையில், 6.24 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. பிரதமரின் பயணங்களுக்கு ரூ.22.76 கோடி, வெளியுறவுத்துறை மந்திரியின் பயணங்களுக்கு ரூ.20.87 கோடி, செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் ஜனாதிபதி 8 முறையும், பிரதமர் மோடி 21 முறையும், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 86 முறையும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 2019க்கு பிறகு பிரதமர் மோடி ஜப்பானுக்கு மூன்று முறையும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு தலா இரண்டு முறையும் சென்றுள்ளார்.

ஜனாதிபதியின் 8 பயணங்களில், 7 பயணங்களை ராம்நாத் கோவிந்த் மேற்கொண்டார். தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரே ஒரு பயணம் மட்டும் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த செப்டம்பர் மாதம் பிரிட்டனுக்கு சென்று வந்தார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.