;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 74 ஆக குறைந்தது!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 82 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 74 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. தொற்றின் பிடியில் இருந்து நேற்று 93 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 703 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் எண்ணிக்கை 1,818 ஆக சரிந்துள்ளது. இது நேற்றைவிட 19 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று 3 பேர் இறந்த நிலையில், இன்று புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,753 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.