;
Athirady Tamil News

வராதீர்கள் வாய்ப்பே இல்லை: அவுஸ்திரேலியா!!

0

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வோரை அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

படகு மூலம் செல்வதன் ஆபத்தையும் பொருட்படுத்தாது சிலர் குடிபெயர முயல்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவிக்கிறது.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கடத்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் எவருக்கும் அவுஸ்திரேலியாவை அடைவதற்கான வாய்ப்பு இல்லையென தெரிவிக்கும் வலுவான பிரச்சாரம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு சட்டவிரோதமான படகும் அவுஸ்திரேலியாவை வெற்றிகரமாக வந்தடையவில்லை. சட்டவிரோதமாக உள்நுழைய நினைத்த எவரையும் அவுஸ்திரேலிய அரசு ஏற்கவில்லையென இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேற எத்தனிப்பவர்களுக்கான ஓர் அமைப்பு உள்ளது, அத்தகைய விண்ணப்பங்கள் ஐ.நா. அகதிகள் நிறுவனத்தால் மதிப்பிடப்படும் எனவும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ஸ்டீபன் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.