அவனை என்ன செய்வேன் என்று பார்ப்பீர்கள்! நாட்டையே உலுக்கிய ‘தேனிலவு’ சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள்

மேகாலயாவில் தேனிலவுக்கு அழைத்துச் சென்று, கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேகாலயாவுக்கு தேனிலவு
மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28), தனது மனைவி சோனத்துடன் மேகாலயாவுக்கு தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
சோனம் கூலிப்படை வைத்து ரகுவன்ஷியை கொலை செய்தது அம்பலமானதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளைவுகள் ஏற்படும்
ராஜா ரகுவன்ஷியின் சகோதரர் விபின் தனது அறிக்கையில், “சோனம் தனது தாயிடம் ராஜூ உடனான தனது காதல் பற்றி கூறியிருக்கிறார். அதற்கு அவரது தாயார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்துகொள்ள அழுத்தம் கொடுத்தால், விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்திருக்கிறார். ஆனாலும், சோனத்தின் தாயார் சமரசம் செய்து ராஜாவை திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
அதற்கு முன் நான் அந்த நபரை என்ன செய்வேன் என்று நீங்கள் பார்ப்பீர்கள்; அதன் விளைவுகளை நீங்கள் அனைவருமே தாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் அவள் ராஜாவைக் கொன்றுவிடுவாள் என்று யாரும் நினைக்கவில்லை” என கூறியுள்ளார்.