;
Athirady Tamil News

வளர்ச்சியடையாத சிசுவின் சடலம் கருச்சிதைவு காரணமாக அகற்றப்பட்டதாக இருக்கலாம் – த.சத்தியமூர்த்தி!!

0

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் வீசப்பட்டிருந்த வளர்ச்சியடையாத சிசுவின் சடலம் கருச்சிதைவு காரணமாக அகற்றப்பட்டதாக இருக்கலாம். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 22ம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த வளச்சியடையாத சிசுவின் சடலம் தொடர்பாக ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஒரு பெண் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசல கூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகிறோம்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளோம் விசாரணைகள் இடம்பெறுகிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் நீர்க்குழாய் ஊடாக வந்து விழுந்த சிசு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.