;
Athirady Tamil News

இணையத்தில் வைரலாகும் ஜெயில் உணவகம் !!

0

பெங்களூருவில் ஜெயில் போன்ற தோற்றத்தில் காணப்படும் ஒரு உணவகம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் ஹர்ஷ்கோயங்கா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள உணவகம் பெங்களூரின் எச்எஸ்ஆர் லேஅவுட் 27-வது மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இதனை மத்திய சிறை உணவகம் என்றே அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

இந்த உணவகத்தின் உட்புறம் சிறை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவத்திற்குள் நுழையும் போது நுழைவு வாயில் மேல் பகுதியில் மத்திய சிறை என்று எழுதப்பட்டுள்ளது. இங்கு உணவு உண்பதற்காக செல்லும் மக்கள் கம்பிகளுக்கு பின்னால் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. மேலும் அந்த வீடியோவில் காவலர்கள் மற்றும் கைதிகள் போன்று உடையணிந்த பணியாளர்கள் உணவு பரிமாறுவது போன்ற காட்சிகளும் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.