எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பார்த்தியா.. வழிப்பறி கொள்ளையில் வசமாக சிக்கிய டிக்டாக் பிரபலம் !!
கேரளாவின் டிக்டாக் பிரபலமான வினீத் விஜயன்(25) மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வழிப்பறி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்ஸ்டாகிரம் பயன்படுத்தும் கேரள பெண்களுக்கு வினீத்தை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. வினீத் என்பதை விட மீசை வினீத் என்பதுதான் பெரிதும் அறியப்பட்ட பெயர். 80,90களில் பிரபலமாக இருந்த பல விஷயங்கள், பொருட்கள், வாகனங்கள் தற்போது மீண்டும் ட்ரென்டாகி வருகின்றன. இதனை ட்ரென்ட் செய்வதில் கேரள இளைஞர்களை அடித்துக்கொள்வதற்கு ஆள் கிடையாது. அதாவது 80களின் பைக்குகள், ஜீப், கார் ஆகியவற்றை புதுப்பித்து மீண்டும் அதனை பயன்படுத்துவதை இளைஞர்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.
வாகனங்கள் மட்டுமல்லாது ட்ரெஸ், ஹேர் ஸ்டைல் என எல்லாவற்றிலும் கேரள இளைஞர்கள் தற்போது 80,90 காலகட்டங்களை பிரதிபலிக்க தொடங்கியுள்ளனர். இப்படி பேமஸானவர்தான் வினீத். 90களில் மலையாள சினிமா ஹீரோக்கள் பெரும்பாலானோர் மீசையை முருக்கிக்கொண்டிருந்தனர். இதேபோல மீசை வைத்துக்கொண்டு அதை வைத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு பல பெண்களின் ஆதர்சன இன்ஸ்டா ஹீரோவாக வினீத் பரினமித்திருக்கிறார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதாவது இவரது ரீல்ஸை பார்த்து பெண்கள் பலர் இவரிடம் பேசுவதுண்டு. இப்படி பழக்கமானவர்தான், 22வயது கல்லூரி மாணவி. இவரிடம் நீண்ட நாட்களாக நண்பர்களாக பேசி வந்த வினீத் பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி பழக தொடங்கியுள்ளார். பின்னர் கொஞ்ம் கொஞ்சமாக தனது வலையில் வீழ்த்திய பின்னர் அவருடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார். வீடியோ காலில் ஆபாசமாக பேச தொடங்கி பின்னர் நிர்வாணமாக பேச தொடங்கியுள்ளார். இதனையடுத்து எதிர் முனையில் இருந்த மாணவியும் வினீத் சொல்வதையெல்லாம் கேட்டு நடந்திருக்கிறார். இதனை அப்படியே தனது போனில் வினீத் ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த மாணவிக்கு போன் செய்து தான் புது கார் வாங்க இருப்பதாகவும் எனவே நீயும் வரவேண்டும் என அழைத்திருக்கிறார். இதனை உண்மை என்று நம்பி சென்ற அந்த மாணிக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.
அதாவது வினீத் தான் தங்கியிருந்த லாட்ஜிக்கு மாணவியை வரவழைத்துள்ளார். அங்கு வைத்து மாணவியை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவி ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து தான் ரெக்கார்ட் செய்து வைத்திருந்த வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார். வீடியோவை பார்த் மாணவிக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை ஷேர் செய்துவிடுவேன் என்று மிரட்டிய வினீத் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வினீத்தை கைது செய்தனர்.
இந்த சம்பவம் கேரளா முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 23ம் தேதி திருவனத்தபுரம் கனியாபுரம் பெட்ரோல் பங்க் மேனேஜர் கையில் பணத்துடன் அதனை வங்கியில் செலுத்த சென்றுக்கொண்டிருக்கும்போது சிலர் அவரை வழிமறித்து ரூ.2.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தலைநகர் பகுதியில் இப்படியொரு கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி இருக்கையில்தான் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு பெரிதும் உதவியது. அதாவது, இந்த வழிப்பறி சம்பவத்தில் டிக்டாக் பிரபலம் வினீத் தனது நண்பர்களுடன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். டிக்டாக் பிரபலம் தொடர்ச்சியாக இதுபோன்று குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள சம்பவம் கேரளாவில் பேசு பொருளாகியுள்ளது.