;
Athirady Tamil News

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: இளவரசர் ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம்!!

0

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் (வயது 73) மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6-ந்தேதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அவர் அரச குடும்பத்தினரில் 10-வது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி, தனது மனைவி மேகன், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முடிசூட்டு விழா 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.