79வது சுதந்திர தினத்தன்று சுதர்சன சக்ரா மிஷனை அறிவித்த பிரதமர் மோடி
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி சுதர்சன சக்ரா மிஷன் (Sudarshan Chakra Mission) எனும் புதிய தேசிய பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.
எதிரிகளின் தாக்குதல் முயற்சிகளை தடுக்க ஒரு சக்திவாய்ந்த ஆயுத அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
இத்திட்டம், ராஷ்ட்ரிய பாதுகாப்பு கவசம் (Rashtriya Suraksha Kavach)எனப்படும் ஒரு தேசிய பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும்.
இது பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு அமைப்பாக இருக்கும். இதில் நவீன கண்காணிப்பு, cyber பாதுகாப்பு மற்றும் உடல் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
இத்திட்டத்தின் முழுமையான விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால்இது இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தனியார் தொழில்நுடப நிறுவனங்களின் கூட்டு செயல்பாடாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த முயற்சி இந்தியாவை வெளிநாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் மீது சார்ந்திருப்பதை குறைத்து உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்தும். மேலும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளில் இந்தியாவின் சுயநிறைவை வலுப்படுத்தும்.
இது, இந்து மத கடவுளான கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்படும் நவீன பாதுகாப்பு கவசமாகும்.
இந்த மிஷன் இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.