மடு திருப்பலி முடித்து யாழ் திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி
மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலியில் கலந்து கலந்து கொண்ட பக்தர்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் பேருந்து டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .
பேருந்து மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மன்னார் நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம்இலுப்பைக்கடவை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் பேரூந்தின் சாரதி பலத்த காயத்துடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதில் பக்தர்கள் சிலரும் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.