வீடொன்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு ; நடந்தது என்ன?
மாத்தறை – மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை (14) முதல் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.