;
Athirady Tamil News

கனடாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா…!

0

கனடாவில் நூறு பாரிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் மகிழ்ச்சியான நகரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம் மகிழ்ச்சியற்ற நகரமும் ஒன்றாரியோ மாகாணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெயின்ட் 2 ஹோம்ஸ் எனும் ரியல் எஸ்டேட் இணையத் தளமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ரியல் எஸ்டேட், பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல், அமைவிடம், சனத்தொகை பரம்பல், மற்றும் சமூகம், உள்ளிட்ட சில முக்கிய விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியலிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் பிரகாரம் நாட்டின் முதல் பத்து மகிழ்ச்சியான நகரங்களில் ஏழு நகரங்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் காணப்படுகின்றன. முதல் பத்து மகிழ்ச்சியற்ற நகரங்களின் வரிசையில் எட்டு நகரங்கள் ஒன்றாரியோவில் அமையப்பெற்றுள்ளது.

கனடாவின் மிகவும் மகிழ்ச்சியற்ற நகரமாக பேரேய் பட்டியலிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.