;
Athirady Tamil News

பம்பலப்பிட்டியில் 8 இளைஞர்கள் திடீர் கைது!!

0

பம்பலப்பிட்டி கடற்பரப்பில அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், 5 மோட்டார் சைக்கிள்களும் அந்த பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பம்பலப்பிட்டிய கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீதியில் செல்லும் வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அதிகளவான மோட்டார் சைக்கிள்கள் வீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 17-23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.