;
Athirady Tamil News

வவுனியாவில் பாவனையாளர் அதிகார சபை விசேட சுற்றிவளைப்பு: பதுக்கி வைக்கப்பட்ட 33 எரிவாயு கொள்கலன்கள் மீட்பு!

0

வவுனியாவில் பாவனையாளர் அதிகார சபை விசேட சுற்றிவளைப்பு: பதுக்கி வைக்கப்பட்ட 33 எரிவாயு கொள்கலன்கள் மீட்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு, பாவனையாளர் அதிகார சபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக, பாவனையாளர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி எச்.எம். இஹ்திசான் தலைமையில் வவுனியாவில் நேற்றும் (03.11) இன்று (04.11) முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவின் பிரதான எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்து நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.