கனடாவில் இருவருக்கு அடித்த அதிஷ்டம் – பிரிக்கப்படவுள்ள 70 மில். டொலர் !!
கனடாவில் இரண்டு பேர் லொத்தர் சீட்டிழுப்பில் பாரியளவு பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளனர். ஒன்றாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த இரண்டு அதிஷ்டசாலிகள் இவ்வாறு பெருந்தொகை பணப்பரிசை வென்றுள்ளனர்.
லொட்டோ ஜாக்பொட் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்கள் இவ்வாறு பரிசுத் தொகையாக வென்றெடுக்கப்பட்டுள்ளது
எழுபது மில்லியன் டொலர் பரிசுத் தொகை இரண்டு அதிஷ்டசாலிகள் மத்தியில் பிரித்துக் கொள்ளப்பட உள்ளது.
இதேவேளை, ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஐந்து பணப் பரிசில்களும் வென்றெடுக்கப்பட்டுள்ளன.
இந்த 70 மில்லியன் ரூபா பணப் பரிசினை வென்றெடுத்த அதிஷ்டசாலிகள் யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.