;
Athirady Tamil News

எம்.பியின் தம்பி கைது !!

0

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த மூன்று முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

டுபாயில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் ​கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என மூவரிடமும் நிதியைப் பெற்றுள்ளார் மோசடிக்கு முகங் கொடுத்தவர்கள் கலகெதர மற்றும் அக்குறணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்கள் மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டார். இந்த மூவருக்கும் டுபாய் விசாக்களை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பில் டுபாய் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேடியறிந்த போது அந்த மூன்று விசாக்களும் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.