;
Athirady Tamil News

வாரங்கல் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தொட்டி உடைந்து விழுந்து 8 பயணிகள் படுகாயம்!!

0

ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், கோர்ரெகுண்டாவை சேர்ந்தவர் ராமபிரம்மம். இவரது மனைவி ரமாதேவி. மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மூலம் விஜயவாடாவுக்கு செல்வதற்காக வாரங்கல் ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயிலுக்காக காத்திருந்தனர். இதேபோல் ஏராளமான பயணிகளும் ரெயிலுக்காக அங்குள்ள பிளாட்பாரத்தில் நின்றனர். இந்நிலையில் ரெயில்வே பிளாட்பாரத்திற்கு மேலே இருந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென உடைந்து விழுந்தது. அதன் அருகில் இருந்த ராமபிரம்மம், அவரது மனைவி ரமாதேவி, மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர்.

மேலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பயணிகளும் லேசான காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேற்கு வங்க பயணிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ரெயிலில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ராமபிரம்மம் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு மத்திய ரெயில்வேயின் செகந்தராபாத் கோட்ட மேலாளர் அபய் குமார் குப்தா சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.