;
Athirady Tamil News

மகாராஷ்டிரா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு – முதல் மந்திரி நேரில் ஆய்வு!!

0

தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காலை நிலவரப்படி நிலச்சரிவில் இருந்து 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் சம்பவ இடம் அடைந்து, நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

தகவலறிந்து முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே ராய்காட் மாவட்டம் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைப் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் நிலச்சரிவு குறித்து பேசினார். மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருவது பற்றி விளக்கிய அவர், உள்துறை மந்திரியிடம் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்ளோம் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.