;
Athirady Tamil News

தாய்லாந்து பிரதமர் வேட்பாளரான பிதா-வை எம்.பி. பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவு!!

0

தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் பிரதமர் வேட்பாலரான பிதா லிம்ஜாரோன்ராட்டை ஒரு எம்.பி. பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை எம்.பி. ஆக பணியாற்றக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளை மீறி, ஊடக நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்ததால், தேர்தலில் வெற்றி பெற்ற மூவ் ஃபார்வர்ட் கட்சியின் தலைவரான பிதா, மே 14 தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. 42 வயதான, பிடா கடந்த வாரம் நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் பிதா சார்ந்த கூட்டணி தேர்தலில் அதிக இடங்களில் வென்றாலும், பிரதமராக அவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. 375 வாக்குகள் தேவை என்ற நிலையில், 324 வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைத்தது.

2014 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இராணுவத்தால் எழுதப்பட்ட பாராளுமன்ற விதிகள் மற்றும் பிடாவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் கட்சிக் கூட்டணியுடன் அரசாங்கத்தை அமைப்பது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஊடக நிறுவனமான iTV-யின் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் தேர்தல் விதிகளை மீறியதாக பிதா-வை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைநீக்கம் குறித்து பிதா பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் உள்ளது என்று நீதிமன்றம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.