;
Athirady Tamil News

கேரளாவில் ஒரே மாதத்தில் 32 லட்சம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுபிடிப்பு!!

0

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்தன. இதனால் விபத்துகளும் அதிகமாகியது. இதனால் வாகனஓட்டிகள் போக்கு வரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்குவதை தடுக்க கேரள மாநில போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதான சாலைகளில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அவற்றின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிச்செல்லும் வாகனங்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நவீன கேமராக்கள் மூலம் கடந்த ஒரு மாதத்தில் 32 லட்சத்துக்கும் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டு உள்ளன. போக்குவரத்து விதிமீறலில் கேரள மாநில எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும், முக்கிய பிரமுகர்களும் சிக்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜா தலைமையில் நடந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராக்களில் ஒரு மாத காலத்தில் மொத்தம் 32 லட்சத்தது 42 ஆயிரத்து 277 போக்குவரத்து விதி மீறல்கள் பதிவாகியிருக்கிறது. அவற்றில் 15 லட்சத்து 83 ஆயிரத்து 367 வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, 3 லட்சத்து 82 ஆயிரத்து 580 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் போக்குவரத்து விதிகளை மீறி, வாகனம் இயக்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறித்து இ-செலான் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.25கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ரூ3.3கோடி மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறலில் 10 எம்.பி.க்கள் மற்றும் 19 எம்.எல்.ஏ.க்களும் சிக்கியுள்ளனர். மேலும் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் போக்கு வரத்து விதிகளை மீறி சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை பொருத்த வரை அதிவேகம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தில் சென்றது ஆகிய சம்பவத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கும் இ-செலான் வழங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு காமிராக்கள் பொருத்தப் பட்ட பிறகு போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் பலர் சிக்கியிருந்தாலும், போக்குவரத்து விதி மீறல்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக மந்திரி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.