யூதர்களின் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு ; இஸ்ரேலிய ஜனாதிபதி இரங்கல்
அவுஸ்திரேலியாவில் யூதர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதுடன், யூத எதிர்ப்பு வாதத்தைக் கையாளுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், எங்கள் இதயம் அவர்களுக்காகத் துடிக்கிறது.
காயமடைந்தவர்கள் மீண்டு வர நாங்கள் பிரார்த்தனை செய்யும் இந்த நேரத்தில், முழு இஸ்ரேலிய தேசமும் அவர்களுக்காக பிரார்த்திக்கிறது.
மேலும் உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று அவர் கூறினார்.