மண்சரிவு அபாயம்; பதுளை வைத்தியசாலைக்கு பூட்டு
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஸ்பிரிங்வெளி வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நமுனுகுல மலை மண்சரிவு அபாயத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க அப் பகுதியிலுள்ள சமூக மண்டபத்தில் வெளிநோயாளர் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.