;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் பலரின் உயிரை காப்பாற்றி ஹீரோ ஆன சாமான்யன் ; பிரதமரும் வாழ்த்து

0

அவுஸ்திரேலியாவில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவை கடந்து அவர் உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவரது துணிச்சலான செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமரும் பாராட்டியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை தடுத்து அவரை கீழே வீழ்த்தி மேலும் பலரின் உயிர்களும் பறிபோகாமல் காப்பாற்றியுள்ளார் பழக்கடை வியாபாரியான ஹமட் எல் அஹமட்.

43 வயதான அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

துரதிஷ்டவசமாக இரண்டாவது துப்பாக்கிதாரியால் அவர் இரண்டு முறை சுடப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைவார் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.