;
Athirady Tamil News

பணிகளை தடுக்கிறார்கள்- எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!!

0

ரெயில்வே கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,309 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் வகையில் லிப்டு, பயணிகள் நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருக்க விசாலமான அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் தொடர்பு முறை, நடை மேம்பால மேற்கூரை, நகரும் படிகட்டுகள், வாகன நிறுத்தும் வசதி, மின் வினியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.

உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள், பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்காளத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத், தெலுங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, தமிழ்நாடு, ஆந்திராவில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 14 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் ரூ.24,470 கோடி மதிப்பில் இரண்டு ஆண்டுகளில் முடியும். தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 25 ரெயில் நிலையங்கள் சீரமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகிறது. 508 ரெயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் சீரமைப்பதற்கான பணிகளுக்கு இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதற்காக 508 ரெயில் நிலையங்களில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் முக்கிய பிரமுகர்கள், ரெயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக அடிக்கலை நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:- வளர்ச்சி அடையும் இலக்கை நோக்கி இந்தியா செல்கிறது. இந்த உணர்வில் இந்திய ரெயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள 1,300 முக்கிய ரெயில் நிலையங்கள், தற்போது அம்ரித் பாரத் ரெயில் நிலையமாக உருவாக்கப்படும். அவை நவீன முறையில் மீண்டும் மேம்படுத்தப்படும். இதில் 508 ரெயில் நிலையங்களின் மறுவடிவமைபப்பு பணிகள் இன்று தொடங்குகிறது. ரெயில் பயணத்தை அணுகக் கூடியதாக மட்டு மல்லாமல் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றுவதே குறிக்கோள் ஆகும். ரெயில் நிலையங்களின் மேம்பாடு, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். ஒவ்வொரு ரெயில் நிலையமும் நகரம் மற்றும் இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் சின்னமாக இருக்கும். இன்று ஒட்டு மொத்த உலகத்தின் கவனம் இந்தியா மீது உள்ளது.

உலக அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா மீதான உலகின் அணுகு முறை மாறி விட்டது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. ஒன்று 30 ஆண்டுகளுக்கு பிறகு முழு பெரும்பான்மை அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்தனர். 2-வது, முழு பெரும்பான்மை அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுத்தது. சவால்களுக்கு நிரந்தர தீர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டது. துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகளின் ஒரு பிரிவினர் இன்னும் பழைய முறையையே பின்பற்று கின்னர். தாங்களும் வேலை செய்ய மாட்டோம். மற்றவர்களை வேலை செய்ய விடமாட்டோம் என்ற கொள்கையில் செயல்படுகின்றன. நாட்டின் ஜனநாயகத்தின் சின்னம் பாராளுமன்றம். அதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால் புதிய நவீன பாராளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கட்சி எதிர்த்தனர். அவர்கள் போர் நினைவிடம் கூட கட்டவில்லை.

நாங்கள் தேசிய போர் நினைவிடத்தை கட்டிய போது அதை விமர்சித்தனர். சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை உலுகிலேயே மிக உயரமான சிலையாக கட்டினோம். அதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகிறோம். ஆனால் சில அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்கள் யாரும் சிலையை பார்வையிட்ட தில்லை. எதிர்மறை அரசியலுக்கு அப்பால் உயர்ந்து நேர் மறையான அரசியலின் பாதையில் செல்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். நாளை தேசிய கைத்தறி தினம். சுதேசி இயக்கத்திற்காக அர்ப்பணித்து கொண்டாடுகிறது. ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ளூர் மக்களுக்காக குரல் என்ற தீர்மானத்தை நினைவு படுத்தும் நாளாகும். வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய நான் ஆகஸ்டு 9-ந்தேதி ஆகும். இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ஒட்டு மொத்த நாடும் தற்போது ஊழல், வம்சம், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.