;
Athirady Tamil News

அதிவேகமாக சென்ற ஆடம்பர காருக்கு நேர்ந்த கதி!!

0

அதிவேகமாக வந்த ஆடம்பர காரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் அழித்துள்ளனர்.

மணிக்கு 253 கி.மீ வேகத்தில் சென்ற கார் காவல்துறையினரால் அழிக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைக் கண்டு ஓட்டுநர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.
இலங்கை மதிப்பில்

அதிவேகமாக சென்ற ஆடம்பர காருக்கு நேர்ந்த கதி(படங்கள்) | Australian Police Destroy The Speeding Car

இந்த Holden Commodore காரின் பெறுமதி சுமார் 30000 டொலர்கள் (சுமார் 95 இலட்சம் இலங்கை ரூபா) ஆகும்.

அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், இந்த காரை அழிக்க காவல்துறையினருக்கு சட்டபூர்வமாக அனுமதி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காரை அழித்ததன் மூலம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு செய்தி அனுப்பியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி டெரெல் பவர் வில்லியம்ஸ் என்ற 20 வயதுடைய நபர் தனது ஹோல்டன் கொமடோரை எல் பிளேட்டுடன் அதிவேகமாக ஓட்டிச் சென்றதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

அவுஸ்திரேலிய சட்டத்தின்படி, எல் போர்டுடன் கூடிய பயிற்சி ஓட்டுநர் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காரை ஓட்ட முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.