;
Athirady Tamil News

பெண்கள் இடஒக்கீடு மசோதா போராட்டம்: சோனியா-பிரியங்கா காந்திக்கு சந்திரசேகரராவ் மகள் கவிதா அழைப்பு!!

0

தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- பி.ஆர்.அம்பேத்கர், சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிட்டார், ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தப் பிரச்சினையை போதுமான அளவு கவனிக்கவில்லை. 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை. அறுதிப் பெரும்பான்மையை வைத்துள்ள நரேந்திர மோடி அரசு ஏன் மசோதாவை நிறைவேற்றவில்லை.

“ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எனது வேண்டுகோள் என்ன வென்றால், அவர்கள் இதை பொது பிரச்சினை யாக பார்க்க வேண்டும். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.இது நம் நாட்டில் உள்ள 70 கோடி பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன். போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, பாஜகவின் ஸ்மிருதி , டிகே அருணா ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.