;
Athirady Tamil News

மண்சரிவினால் ஏற்பட்ட பாரிய விபத்து: பொலிஸாரினால் உயிர் தப்பிய 70 பேர்..!

0

அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தியலபே பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

மண்சரிவுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் சுதசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பிரதேச செயலாளரினால் ஆபத்தான 21 குடும்பங்களை அவ்விடங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 70 பேர் தற்போது தியலபே ஆலயம் மற்றும் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் கோரிக்கைக்கமைய, ​​விழிப்புடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ​​ஆபத்தில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அந்த இடங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்கள்
தியலபே ஆலயமும் அக்குரஸ்ஸ பொலிஸாரும் இணைந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

இந்த மண்சரிவினால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும், பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.