திருமண நிகழ்வில் அசம்பாவிதம்; பறிபோன உயிர்

திருமண நிகழ்வொன்றின்போது 59 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலிம்புல பிரதேசத்தில் இடபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கு இடையில் மோதல்
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாகம்மனகே சிறிமேவன் என்பவரே கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விலிம்புலவில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு வியாழக்கிழமை (12) இடம்பெற்ற திருமண நிகழ்வின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவருக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாகவே கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.