;
Athirady Tamil News

கேரளாவின் பெரும் கோடீஸ்வரர்… தினசரி வருவாய் ரூ.180 கோடி: அவரது மொத்த சொத்து மதிப்பு

0

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த எம் ஏ யூசுப் அலி, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர். கடந்த 2022ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியலில் 35 வது பணக்கார இந்தியராக யூசுப் பட்டியலிடப்பட்டார்.

லுலு குழுமத்தின் தலைவர்
கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த யூசுப் லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார். மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட 23 நாடுகளில் லுலு குழுமம் செயல்பட்டு வருகிறது.

65,000 எண்ணிக்கை கடந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். லுலு குழுமத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ.66,000 கோடி என்றே கூறப்படுகிறது. கேரள மாநிலத்தின் பெரும் கோடீஸ்வரர் என பட்டியலிடப்பட்டுள்ள யூசுப் அலி, இந்தியாவின் 35வது கோடீஸ்வரர் எனவும், அவரது சொத்து மதிப்பு ரூ.43,612 கோடி எனவும் 2022ல் கூறப்பட்டது.

23 நாடுகளில் லுலு
ஆனால் தற்போதைய அவரது சொத்து மதிப்பு என்பது 7.1 பில்லியன் டொலர் என்றே கூறப்படுகிறது. யூசுப் அலியின் கல்வித் தகுதி என்பது வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் டிப்ளமோ என்றே கூறப்படுகிறது.

1973ல் யூசுப் அலி தனது மாமாவுடன் சிறிய விநியோக நிறுவனத்தில் பணிபுரிவதற்காக அபுதாபிக்கு சென்றார். ஆனால் 1990களில் தமது கடின உழைப்பால் முதல் லுலு வணிகவளாகத்தை திறந்துள்ளார். தற்போது 23 நாடுகளில் லுலு குழுமம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.