;
Athirady Tamil News

ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்கிடங்கை கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம்

0

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்ததின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

யுத்ததின்போது ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய மிகப் பெரும் ஆயுதக்கிடங்கை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றியதாகக் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.