;
Athirady Tamil News

Swiggy Instamart -ல் ஒரே நாளில் அதிக பொருட்களை வாங்கி குவித்த சென்னை நபர்

0

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) சென்னையை சேர்ந்தவர் ஒரே நாளில் அதிகபட்சமான பொருட்களை வாங்கியுள்ளார்.

ஒன்லைன் ஆர்டர்
தற்போதைய காலங்களில் வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கி வருகிறோம். ஒருவரின் கையில் மொபைல் இருந்தாலே போதும். தங்களுக்கு தேவையான பொருள்களில் ஒன்லைன் தளங்கள் மூலமாக ஆர்டர் செய்கிறோம்.

உணவு முதல் ஐபோன் வரை ஒரே இடத்தில் இருந்தபடியே பெறுகிறோம். குறிப்பாக உணவு செயலிகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்வது இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்
அந்தவகையில், ஒன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, 2023 -ம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் ஜூஸ், பிஸ்கட், சிப்ஸ் உள்ளிட்டவற்றை ரூ.31748 -க்கு வாங்கி குவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) வெங்காயம், ஆணுறை, வாழைப்பழம், சிப்ஸ் ஆகிய பொருட்கள் அதிகமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.