;
Athirady Tamil News

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

0

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.

இதையடுத்து நேற்றைய தினம் மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தே.மு.தி.க தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த்(71) உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.