;
Athirady Tamil News

எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லாருக்கும்; சோத்துல வேறுபாடே கிடையாது – விஜயகாந்த்!

0

கடந்த 1986ம் ஆண்டு விஜயகாந்த் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் பசியோடு வருபவர்களை வயிறு நிறைய சாப்பிட வைத்து அனுப்பும் நல்ல மனம் படைத்தவர் என்பது ஊர் அறிந்த விஷயம். இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டு அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் விஜயகாந்த் பேசியதாவது. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் ஓரளவு நட்சத்திர அந்தஸ்துக்கான உண்மையான காரணம் என்னவென்றால் ‘இன்சல்ட்’ தான். சினிமா துறையில் மிகவும் அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கொண்டவர்களில் ஒருவன் நான்.

யாரும் அவமானப்படக்கூடாது
என் சொந்தப் படமான ‘உழவன் மகன்’ ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது.

கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை. நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன்.

என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது. தினமும் முப்பது, நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்” என்று விஜயகாந்த் பேசியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.