;
Athirady Tamil News

மும்பை டூ அயோத்தி… ராமர் கோயிலுக்கு நடந்து செல்லும் இஸ்லாமிய பெண்!

0

உத்தர பிரதேசம்: வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விழாவை எதிர்நோக்கி உள்ளனர்.

இதற்கிடையே, புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், பல்வேறு திட்டங்களை தொடக்கி வைக்கவும் பிரதமர் மோடி நாளை அயோத்தி வருகை தருகிறார். பிரதமரின் வருகையையொட்டி 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், நம்பிக்கையின் பயணத்தை எடுத்துக்காட்டும் வகையில், இஸ்லாமிய பெண் ஒருவர் மும்பையில் இருந்து அயோத்திக்கு நடைபயணமாக செல்ல முடிவு செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எல்லாவிதமான கருத்துக்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஷப்னம் என்ற இஸ்லாமிய இளம்பெண் மும்பையிலிருந்து அயோத்திக்கு தனது நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார். அவருடன் அவரது நண்பர்களான ராமன் ராஜ் சர்மா மற்றும் வினீத் பாண்டே ஆகியோர் உள்ளனர். ஷப்னம் 1,425 கிலோமீட்டர் தூரத்தை பாதயாத்திரையாகக் கடக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

71 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அயோத்தி கோயில் வளாகத்தில் 2.77 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் அடங்கும், கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 161 அடி உயரமும், மூன்று தளங்களும், ஒவ்வொன்றும் 19.5 அடியும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.