;
Athirady Tamil News

யாழில். கைக்குண்டுடன் இளைஞன் கைது

0

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை வழிமறித்து சோதனையிட்ட போது , இளைஞனின் உடைமையில் இருந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , திருட்டு சம்பவங்கள் சிலவற்றுடன் இளைஞனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.