;
Athirady Tamil News

Joseph Vijay…களத்தில் சந்திப்போம்..! திமுக ஆதரவாளரின் வாழ்த்து – வைரல் ட்வீட்..!

0

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ள விஜய் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர துவங்கியுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகைக்கு பலரும் குறிப்பாக அரசியல் பிரபலங்களும் வரவேப்பை தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் உதயநிதி, அதிமுகவின் ஜெயக்குமார், நா.த.க சீமான், பாஜக அண்ணாமலை என பலரும் தங்களது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் – நடிகர் மற்றும் திமுகவின் ஆதரவாளரான கரு பழனியப்பனின் ட்வீட் தற்போது வைரலாகி வருகின்றது.

தனது வாழ்த்தில் அவர், திரை வெற்றிக்காக அரசியலை பயன்படுத்தாமல், திரைப்பயணம் முடித்து அரசியலுக்கு வருவேன் என சொல்லும் விஜய் பாராட்டுக்குரியவர். தேர்தல் களத்திற்கு உங்களை வரவேற்கிறேன். ஜோசப் விஜய்.. களத்தில் சந்திப்போம்” என்று கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.