;
Athirady Tamil News

சுதந்திர தினமன்று ஏற்பட்ட கோர விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

0

புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த வாகன விபத்தானது, நேற்று(04) இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இடம்பெற்ற சுதந்திரத் தின நிகழ்வைப் பார்த்துவிட்டு முச்சக்கர வண்டியில் திரும்பிச் செல்லும் போது கற்பிட்டி பகுதியிலிருந்து வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதூண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக சிகிச்சை
இதன்போது கற்பிட்டியிலிருந்து முச்சக்கர வண்டியில் பின்புரத்தில் அமர்ந்திருந்த ஐந்து பேரில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விசாரணை
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, உயிரிழந்தவர் 67 வயதுடைய கற்பிட்டி மண்டலக்குடாப் பகுதியைச் சேர்ந்தவரென என தெரியவந்துள்ளது.

மேலும், விபத்துச் தொடர்பில் கற்பிட்டி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.