;
Athirady Tamil News

ஜப்பானில் தொடர் சரிவில் மக்கள் தொகை

0

ஜப்பானில் மக்கள் தொகை சென்ற ஆண்டு (2024) பெருமளவில் சரிவு கண்டுள்ளது. அதேவேளை ஜப்பானில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது கவலையளிப்பதாக ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) கூறினார். எனவே அதனைக் கருத்தில்கொண்டு மேலும் பல குடும்ப நலன் பேணும் திட்டங்களை முன்வைக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

நீக்குப்போக்கான வேலை நேரம், இலவச பகல் நேரப் பராமரிப்பு ஆகியவை அவற்றில் அடங்கும்.

அதேவேளை ஜப்பானின் சென்ற ஆண்டு மக்கள்தொகை சுமார் 909,000 வரை சரிவு கண்ட நிலையில் 16ஆவது ஆண்டாக ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1968ஆம் ஆண்டு முதல் ஆய்வு நடத்தப்படுவதிலிருந்து ஜப்பானின் மக்கள் தொகை ஆகப்பெரிய சரிவை சந்தித்து வரும் நிலையில் தற்போது ஜப்பானின் மக்கள் தொகை 120.65 மில்லியன் என புள்லி விபரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.