;
Athirady Tamil News

நாட்டிற்கு மில்லியன் கணக்கில் முட்டைகள் இறக்குமதி

0

நாட்டிற்கு 30 மில்லியன் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய முட்டைகள் இறக்குமதி
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சமீபத்தில், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 60 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.