;
Athirady Tamil News

100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிப்பு:ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்

0

உலகளாவிய ரீதியில் உடல் பருமன் அதிகரித்து வாழும் நபர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வறிக்கையின் படி, குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்குமே இந்த பிரச்சினை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன் விகிதம்
பெரியவர்களில், உடல் பருமன் விகிதம் பெண்களில் இருமடங்காகவும், ஆண்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் உள்ளது.

கடந்த 1990 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் அதிகரித்து காணப்படுகிறது, என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எடை குறைந்த பெண் குழந்தைகளின் விகிதம் 1990ல் 10.3 சதவீதத்தில் இருந்து 2022ல் 8.2 சதவீதமாகவும், ஆண் குழந்தைகளில் 16.7 சதவீதத்தில் இருந்து 10.8 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.எம்.ஐ. கணக்கீடு மூலம் 1990 முதல் 2022 வரையில் உடல் பருமன் விகிதத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் சுமார் 1,500 ஆய்வாளர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.