;
Athirady Tamil News

கிளிநொச்சியில் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் தென்னிலங்கையர்கள்

0

கிளிநொச்சி – பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி காணி பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆனையிறவுக்கும் இயக்கச்சிக்கும் இடையில் ஏ9 வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள காட்டுப்பகுதியில் இயந்திர உபகரணங்கள் மூலம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் காடுகளை வெட்டி பல ஏக்கர் பரப்பளவில் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்களது கோரிக்கை
இந்த பிரதேசத்திற்கு அருகில் இராணுவ முகாம் ஒன்றும் இருக்கிறது. இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், பளை பொலிஸார், கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கும் பொது மக்கள் தாம் காடுகளை வெட்டுகின்ற சிலரிடம் சென்று விசாரித்த போது அவர்கள் பதிலளிக்கவில்லை என்று கூறுகின்றனர்.

எனவே உரிய தரப்பினர் குறித்த காடழிப்பு விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.