;
Athirady Tamil News

பிரான்ஸ் பேஷன் ஷோவில் திடீர் குழப்பம்!

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பேஷன் ஷோவில் திடீரென புகுந்து பீட்டா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வண்ண ஆடை அணிந்தபடி இளம் பெண்கள் ஒய்யார நடை போட்டபோது, விலங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு பீட்டாவைச் சேர்ந்த பெண்ணும் கேட் வாக் செய்தார்.

பேஷன் ஷோவில் சலசலப்பு ஏற்பட்டபோது ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று, பீட்டா அமைப்பை சேர்ந்த பெண்ணை அப்புறப்படுத்தினர்.

அதே நேரத்தில் பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணும், பதாகைகளை ஏந்திக் கொண்டு கேட் வாக் செய்ததால் பாதுகாவலர்கள் திணறும் நிலை ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.