;
Athirady Tamil News

எதிர்க்கட்சிக்கு ஆதரவு; இருந்த ஒரேஒரு ஊடக்கத்திற்கும் பூட்டு!

0

அரசாங்கத்தின் ஒரே தேசிய ஊடகமான டெலமை விரைவில் மூட உள்ளதாக அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவில் இருந்த ஒரே தேசிய ஊடகத்தை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் உள்ள ஒரே தேசிய ஊடக நிறுவனம் டெலம். சமீபகாலமாக இதன் மீது, முன்னாள் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னரின் கொள்கைகளை ஊக்குவித்து அவரது முகவராக செயல்படுவதாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

அதேவேளை இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டது.

இந்தநிலையில் அரசாங்கத்தின் ஒரே தேசிய ஊடகமான டெலமை விரைவில் மூட உள்ளதாக அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு அர்ஜென்டினாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.