நடிகர் விஜய்யின் புது முயற்சி! அரசியல் பயணத்தை வலுவாக்க நடவடிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த செயலியின் முதல் உறுப்பினராக கட்சியின் தலைவரான விஜய் இணைந்து கொண்டுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கட்சியின் உறுப்பினர்
மகளீர் தினமான இன்று கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக விஜய் வெளியிட்டுள்ள அறி்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சமூக ஊடகங்களான வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஊடாகவும் தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம் என்று விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay pic.twitter.com/e4DqN18sn2
— TVK Vijay (@tvkvijayhq) March 8, 2024
அத்துடன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்தரம் படைக்க ஒன்றினையுமாறும் விஜய் கோரியுள்ளார்.

