;
Athirady Tamil News

பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

0

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (10.03.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி செயலணியின் சிரேஸ்ட அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாந்தன விக்ரமசிங்க, ஜனாதிபதியின் வடக்கு மாகாண அபிவிருத்தி செயலணியின் செயளாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் சிவபாலசுந்தரன், கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் நளாயினி, கிளிநொச்சி மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன், யாழ் மாவட்ட உதவி அரச அதிபர் ( காணி) ஸ்ரீமோகன், வலி வடக்கு பரதேச செயலர் மற்றும் காணி உரிமையாளர்கள் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் சுமார் 70 ஏக்கர் காணி நிலங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் காணி நிலங்களும் பாதுகாப்பு தரப்பினரால் விடுவிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.

காணிகளின் உரிமங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி செயலணியின் சிரேஷ்ட அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க ஆகியோர் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.