;
Athirady Tamil News

திமுக., அதிமுக., கட்சிகளுக்கு CSK அணி கோடிக்கணக்கில் நிதி.., வெளியான தேர்தல் பத்திர விவரங்கள்

0

CSK அணி தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு மொத்தம் ரூ.15 கோடி நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது.

சிஎஸ்கே அணி 14 ஐபிஎல் சீசன்களில் விளையாடி இதுவரை 5 முறை பட்டத்தை வென்றுள்ளது. 2008 முதல் தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வருகிறார்.

இந்திய சிமெண்ட்ஸ் தலைவரும் முன்னாள் BCCI தலைவருமான சீனிவாசன் இந்த அணியின் உரிமையாளராக உள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நிலையில், தேர்தல் பத்திர விவகாரம் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சில தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம் இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு ரூ.656.5 கோடி கிடைத்துள்ளது. அதேபோல் அதிமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 கோடி கிடைத்துள்ளது.

இதில் சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் (India Cements) நிறுவனம் திமுகவுக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளது.

அதேபோல் அதிமுகவுக்கு கொடுத்த ரூ.6 கோடியில் ரூ.5 கோடியை சிஎஸ்கே (Chennai Super Kings) அணி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, CSK அணி நிர்வாகமும் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனமும், திமுக மற்றும் அதிமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.15 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் திகதி மற்றும் 15-ஆம் திகதிகளில் அதிமுகவின் வங்கி கணக்கிற்கு, 38 தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் ரூ.6.05 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 38 தேர்தல் பத்திரங்களில், 32 தேர்தல் பத்திரங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வழங்கியுள்ளது.

CSK சார்பில் மட்டும் ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 தேர்தல் பத்திரங்கள் தலா ரூ.1 கோடி மதிப்புடையது. மற்ற 30 தேர்தல் பத்திரங்கள் தலா ரூ.10 லட்சம் மதிப்புடையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.